9 ஆண்டுகால சேவை.. நாய்களுக்கு கேக் வெட்டி பிரியா விடை! - விமான நிலையத்தில் கேக் வெட்டி பிரியா விடை
குல்லு: இமாச்சல பிரதேசம் பூந்தர் விமான நிலையத்தின் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் பணியாற்றிய இரு நாய்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. சாம் மற்றும் மேக்ஸ் ஆகிய இரு நாய்களும் கடந்த 2014ஆம் ஆண்டு பூந்தர் விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் பணியில் சேர்ந்தன. ஏறத்தாழ 9 அண்டுகளுக்கு பின் ஓய்வு அளிக்கப்பட்ட சாம் மற்றும் மேக்ஸ்க்கு விமான நிலைய ஊழியர்கள் கேக் வெட்டி பிரியா விடை வழங்கினர். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாம் மற்றும் மேக்ஸ் ஏற்றப்பட்டடு வீரர்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST