‘ஆளுநர் வரும்போது இது போன்ற போராட்டங்களை தவிர்ப்பது நல்லது’ - தமிழிசை சௌந்தரராஜன் - Tamilisai Soundararajan
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (மே 24) நடைபெற்றது. இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “ஆன்மீகமும் தமிழும் பிரிக்க முடியாது. ஆன்மீகத்தோடு கூடிய தமிழ் இன்னும் தமிழ்நாட்டில் பரப்பப்பட வேண்டும் தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் இல்லை என சில பேர் கொள்கை ரீதியாக பேசி வருகிறார்கள். அது தவறு என மக்கள் தங்கள் நடவடிக்கையில் நிரூபித்துக் கொண்டு வருகிறார்கள்.
கருப்புக் கொடி காண்பிப்பது தவறு, எல்லோருக்கும் தமிழ்நாடில் சென்று வருவதற்கு உரிமை உள்ளது. அவரவர்கள் கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆன்மீக நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்று வரும்பொழுது இது போன்ற போராட்டங்களை தவிர்ப்பது நல்லது.
புதுச்சேரி ஆளுநர் வெளியேற வேண்டும் என்ற சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. கரோனா நேரத்தில் புதுச்சேரி மக்களுக்காக அந்த அளவிற்கு சேவையற்றி உள்ளேன். டெல்லி உச்ச நீதிமன்றம் தெரிவித்த பிறகு எனக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சொல்கிறார்கள். புதுச்சேரி நாராயணசாமி அதிகார வெறிபிடித்து அலைகிறேன் என்று என்னை கூறுகிறார். எனக்கு எங்கேயுமே வெறி பிடிக்கவில்லை” என சிரித்தபடி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை எதிர்த்து போராடுபவர்களுக்கெல்லாம் என்னிடம் சுமூகமான உறவு உள்ளது. ஓராண்டுகளில் ஆயிரத்து 500 கோப்புகளை சரி செய்துள்ளேன். 17 கோப்புகளுக்கு சந்தேகங்களை எழுப்பியுள்ளேன்.
குழந்தைகளுக்கு லேப்டாப், மருத்துவமனையை மேம்படுத்துவது மற்றும் 2ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்திலும் முதலமைச்சர் என்ன நினைக்கிறாரோ அதற்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன். தான்தோன்றித்தனமாக முதலமைச்சரையும், அமைச்சரையும் ஒதுக்கிவிட்டு ஆளுநர் கையில் அதிகாரத்தை எடுத்துள்ளார் என்பதை முற்றிலும் நான் மறுக்கிறேன்.
எனவே என்னை எதிர்ப்பவர்களை பற்றி கொஞ்சம் கூட நான் கவலைப்படவில்லை எனது பணியில் கொஞ்சம் கூட சுயநலம் இல்லை என புதுச்சேரி நாராயணசாமி கூறுகிறார். ஆளுநர் எப்போதும் இங்கேயே உள்ளார் என்று நான் இங்கேயே இருப்பது குறித்து அவர் சந்தோஷப்பட வேண்டும். எனவே என்னை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்பது என்னுடைய கருத்து” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கள்ளச்சாராய மரணங்கள்; கல்லா கட்டித் தரும் அமைச்சர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? சீமான் கேள்வி