நீலகிரி மலை ரயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தாருடன் பயணம்! - நீலகிரி மாவட்ட செய்தி
நீலகிரி: ஐந்து நாள் சுற்றுப்பயணமாகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 3ஆம் தேதி மாலை உதகைக்குச் சென்றடைந்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் கடந்த 5ஆம் தேதி துணைவேந்தர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். இன்று நீலகிரி மலை ரயிலில் உதகையிலிருந்து குன்னூர் வரை பயணம் செய்து இயற்கைக் காட்சிகளைத் தனது குடும்பத்தாருடன் கண்டு ரசித்தார்.
ஆளுநர் குன்னூரிலிருந்து மீண்டும் உதகைக்குச் சாலை மார்க்கமாக வருகை புரிவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் வருகையால் உதகை மலை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் உதகையில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி வரும் 9ஆம் தேதி சென்னை திரும்புவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் பயணித்த மலை ரயிலில் பாதுகாப்பு கருதி நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே. பிரபாகர் உடன் சென்றார்.
இதையும் படிங்க: தேயிலை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு: அமைச்சர் கா.ராமச்சந்திரன் உறுதி!