பொங்கலுக்கு பானை இலவசமா கொடுங்க - ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் - அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்க
கோவை: பொங்கல் திருநாளன்று விவசாயிகள் நலனுக்காக தமிழ்நாடு அரசு பருப்பு, சக்கரை, கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களும் நெசவாளர்கள் நலன் காக்க வேஷ்டி, சேலையை கொள்முதல் செய்கிறது. அதுபோல் அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்கவும் மண்பாண்ட தொழிலாளர்கள் நலனுக்காகவும் புதுப்பானையில் பொங்கல் வைக்க களிமண்ணால் ஆன ஒரு அடுப்பும் புதுப்பானையும் கொள்முதல் செய்து இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க கோரிக்கை எழுந்தது. அதற்கான ஆணையை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதுப்பானை, அடுப்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST