தமிழ்நாடு

tamil nadu

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் ஐபிஎல் பார்த்த அதிகாரிகள்

ETV Bharat / videos

விவசாய குறைதீர் கூட்டத்தில் ஐபிஎல் பார்த்த அரசு அதிகாரிகள் - Dindigul

By

Published : Jun 1, 2023, 8:37 AM IST

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாரந்தோறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். விவசாய குறைதீர் கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், கொடைக்கானல், ஆத்தூர் உள்ளிட்ட பத்து தாலுகாக்களில் இருந்து விவசாயிகள், விவசாயம் சார்ந்த தங்களது பிரச்னைகள் மற்றும் தேவைகள் குறித்து புகார் மனுக்களும் மற்றும் நேரடியாக அதிகாரிகள் உடனான கலந்துரையாடலும் நடைபெறும். 

அந்த வகையில், நேற்று (மே 31) விவசாய குறைதீர் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நிலக்கோட்டை, ஆத்தூர் கொடைக்கானல் உள்ளிட்ட பத்து தாலுகாக்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் கேள்விக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விவசாயிகள் கூறும் கோரிக்கையை எற்று பதில் அளித்தனர்.

இந்த நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட சில அதிகாரிகள் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்து கொண்டும், வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டும், செல்போனில் பேசிக் கொண்டும் இருந்துள்ளனர். இதனையடுத்து, விவசாய குறைதீர் கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் அதிகாரிகள் ஐபிஎல் பார்த்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details