திண்டுக்கல் அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய 30 பயணிகள் - dindigul bus accident
திண்டுக்கல்லில் இருந்து இன்று (பிப். 12) திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று 30 பயணிகளை உடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் பாண்டி (35) என்பவர் ஓட்டி சென்றார். திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலை ம.மு.கோவிலூர் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, குறுக்கே டூவீலரில் வந்துள்ளது.
இதனால் அவர் மீது மோதுவதை தவிர்க்க பாண்டி திடீரென பிரேக் அடித்தார். இதனால் பேருந்து கட்டுப்பாட்டை மீறி எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை. ஓட்டுநர் ஸ்ரீதர்பாண்டி(36), நடத்துனர் நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டி சிங்கராஜ் (43), பயணிகள் கொசவபட்டி ஜெசிகா (31), உசிலம்பட்டி சேர்ந்த மகேஸ்வரி (35), மதுமிதா (17), பாரதிபுரம் பவித்ரா (23), சசிகலா (38) ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டன. இவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.