தமிழ்நாடு

tamil nadu

கோயம்புத்தூர்: நல்லாயன் தொடக்க பள்ளியில் மாணவர் தேர்தல்: ஆர்வத்துடன் வாக்களித்த குழந்தை வாக்காளர்கள்!

ETV Bharat / videos

Coimbatore: தொடக்கப் பள்ளியில் மாணவர் தேர்தல்: ஆர்வத்துடன் வாக்களித்த சுட்டி வாக்காளர்கள்! - students voted

By

Published : Jul 17, 2023, 6:32 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் அரசு உதவி பெறும் நல்லாயன் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிரது. இந்தப் பள்ளியில் வருடந்தோறும் பள்ளி மாணவர் தேர்தல் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் மாணவர்கள் ஒவ்வொரு பொறுப்பிற்கும் போட்டியிடுவர். உண்மையான தேர்தல் நடைபெறும் முறைப்படி வாக்களிப்பு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள், பதவியேற்பு ஆகியவை நடைபெறும்.  அதன்படியே இன்றைய தினம் வாக்களிப்பு நடைபெற்றது. இதற்கென கணினி மயமாக்கப்பட்ட வாக்களிப்பு இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு மாணவர்கள் வாக்களித்தனர்.

இதனை பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வையிட்டனர். இந்த வருடம் பள்ளி தலைவர், துணைத் தலைவர், உணவுத் தலைவர், விளையாட்டுத் தலைவர் சுற்றுச்சூழல் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தலா மூன்று பேர் போட்டியிடுகின்றனர். இதற்கென ஒவ்வொருவருக்கும் தனித்தனி சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.

இந்த மாணவர் தேர்தலில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணி அம்மாள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி செயல் அதிகாரி சுமதி ஆகியோரும் வாக்களித்தனர். மேலும் மாணவர்களுடனும் இது குறித்து அவர்கள் கலந்துரையாடினர். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details