தமிழ்நாடு

tamil nadu

Ramadan: ஆடு விற்பனை அமோகம்.. 3 மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனை!

By

Published : Apr 20, 2023, 11:47 AM IST

ஆட்டு விற்பனை

ஈரோடு: தமிழ்நாட்டில் 2 ஆவது பெரிய மாட்டுச் சந்தையான புன்செய் புளியம்பட்டி மாட்டுச்சந்தையில் இன்று ஆடு, மாடுகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனர். ரமலான் மற்றும் சித்திரை மாத பண்டிகையையொட்டி இறைச்சிக்காக செம்மறி, வெள்ளாடு, குரும்பை ஆடுகள் போன்றவை விற்பனை அதிகரித்துள்ளது.

இதில் சுமார் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் 10 கிலோ கொண்ட ஆட்டுக் கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை மடமடவென உயர்ந்து விற்பனையானது. 

சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள் சுமார் 1 கோடிக்கு வரை விற்பனையானது. ரமலான் பண்டிகை முன்னிட்டு காலை முதலே சுறுசுறுப்பாக நடந்த ஆட்டுச்சந்தையில் ஆடுகளை வாங்கக் கேரளா, கர்நாடக என பல இடங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் இன்று கூடிய சந்தைக்கு 40 எருமைகள், 250 கலப்பின மாடுகள், 80 கன்றுகள் மற்றும் 300 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனர். சுமார் 80 லட்சம் வரை மாடுகளும் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details