ஞீலிவனேஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் விழா - Gneeliwaneswarar Temple Chithirai car Festival
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் கோயில். இந்த கோவிலின் சித்திரை தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமண தடை நீங்கும் பரிகார ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான சித்திரைப் பெருந்திருவிழா மே 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் ஆறாம் நாள் திருவிழாவான கடந்த 10 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்ட விழா நேற்று (மே.13) மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
thirupanjili car festiva