தேசிய கொடியை ரூபிக் கியூப் மூலம் உருவாக்கி சிறுமி சாதனை - தேசிய கொடி உருவாக்கி சாதனை
சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் - ஜூலி தம்பதியினரின் மகள் கிறிஸ்டா ஜெசிகா (8). இவர், அயனம்பாக்கத்தில் உள்ள ஆச்சி குளோபல் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், 75ஆவது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் 955 ரூபிக் கியூப்-களைக் கொண்டு அதனை தீர்வு கண்டு 7மணி நேரத்தில் 6.5 அடி உயரமும், 5.5 அடி அகலமும் கொண்ட, மூவர்ணங்களால் ஆன இந்திய கொடியை உருவாக்கி அசத்தியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST