முதியவர் மேல் ஏறிய ராட்சத கிரேன்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்.. - போக்குவரத்து புலனாய்வு பிரிவு
கோவை: சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் மருதாச்சலம் (70) ஆடு மேய்த்து வருமானம் ஈட்டி வந்தார். இவர் இன்று (மார்ச் 10) சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வேல்முருகன் என்ற வாலிபர் ஓட்டி வந்த ராட்சச கிரேன் சாலையின் ஓரமாக திரும்பி உள்ளது. அப்போது அந்த கிரேனின் முன் பக்கம் முதியவரின் மேல் இடித்துள்ளது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில்., அந்த வாகனத்தின் பின் டயர் மருதாச்சலத்தின் மீது ஏறி இறங்கியது. இதில் மருதாச்சலம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர் மணிவண்ணன் என்பவர் சிங்காநல்லூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் கிரேன் ஓட்டுநர் தப்பியோடியது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான கிரேன் ஓட்டுநர் வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் முதியவர் மீது கிரேன் ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.