ஈரோட்டில் வெகு விமர்சையாக நடந்த ரேக்ளா ரேஸ் - சீறிப்பாய்ந்த குதிரைகள்
ஈரோடு: பவானி-குமாரபாளையம் குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் 22ஆம் ஆண்டு விழாவையொட்டி, இன்று (டிச.26) ரேக்ளா ரேஸ் நடந்தது. பவானி நகர்மன்ற தலைவர் சிந்ததூரி இளங்கோவன், வழக்கறிஞர் பாபா மோகன் ஆகியோர் கொடியசைத்து ஆரம்பித்த இப்போட்டி உற்சாகமாக 20 கி.மீ., வரையில் நடந்தது. இதில், சீறிப் பாய்ந்து வென்ற குதிரைகள் ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரூபாய் என பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST