திண்டுக்கலில் பழ வியாபாரி விபத்தில் உயிரிழப்பு: சிசிடிவி காட்சி வெளியீடு - திண்டுக்கலில் பழ வியாபாரி விபத்தில் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வி.புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் என்ற பழ வியாபாரி திண்டுக்கலில் இருந்து வேடசந்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று (ஏப்.21) சென்றுக்கொண்டிருந்தார். அப்போது காக்காதோப்பு பிரிவு அருகே சென்றபோது சென்டர் மீடியன் அருகே கிடந்த கல் மீது இருசக்கர வாகனம் ஏறியதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
சிசிடிவி காட்சிகள் வெளியீடு