தமிழ்நாடு

tamil nadu

நான்கு டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

ETV Bharat / videos

வாலாஜாபேட்டை சுங்க சாவடியில் சோதனை: நான்கு டன் குட்கா பான்மசாலா பறிமுதல்!

By

Published : Jul 17, 2023, 11:02 AM IST

ராணிப்பேட்டை:வாலாஜாபேட்டை நகராட்சி பகுதியில் உள்ள சென்னா சமுத்திரம் சுங்க சாவடியில் காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையில் வாலாஜாபேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அதிவேகமாக வந்த இரண்டு சொகுசு கார்களை மடக்கி பிடித்து விசாரிக்க முயன்ற போது இரண்டு சொகுசு காரின் ஓட்டுநர்கள் உட்பட நான்கு பேர் காரை வழியிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடி சென்றனர். இதனையடுத்து இரண்டு கார்களை சோதனை செய்ததில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் இரண்டு காரில் உள்ள நான்கு டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு உதவியாக இருந்த இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனிடையில் தப்பி ஓடிய நான்கு பேரில் ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த வர்ஷிராம்(25) நியூரிசா(22) ஆகிய இரண்டு வடமாநில இளைஞரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய மற்ற இரண்டு நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:யோகா கலைக்கு உலகளவில் அங்கீகாரம் வாங்கித் தந்தவர் மோடி - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

ABOUT THE AUTHOR

...view details