'எங்களுக்கு கிடைக்காதது, உங்களுக்கு கிடைத்துள்ளது பயன்படுத்திக்கொள்ளுங்கள்' - முன்னாள் மாணவர்கள் பேச்சு! - ஈரோடு கோபிசெட்டிபாளையம்
ஈரோடு:கோபிசெட்டிபாளையம் - மொடச்சூர் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1968 முதல் 1976ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் 36 பேர், அவர்கள் பயின்ற பள்ளியை மேம்படுத்தும் நோக்கிலும் மாணவர்களின் நலனுக்காகவும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புத்தகங்கள் வைக்கும் மூன்று பீரோக்கள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாகப் பாடங்களை கற்றுக்கொள்ள ஸ்மார்ட் டிவி ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்கள்.
மேலும், கணக்குப் பாடப் பிரிவில் பின்தங்கிய மாணவர்களுக்காக அவர்களது சொந்த செலவில் தனி ஆசிரியர் நியமிக்கப்பட்டு கற்றுக்கொடுக்க முன்னாள் மாணவர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், மாணவர்களிடையே பேசிய முன்னாள் மாணவர் ஒருவர், ''நாங்கள் பயின்ற காலகட்டத்தில் இப்போது உள்ள ஸ்மார்ட் வசதிகள் இல்லை. அதனால், அதிக விசயங்கள் எங்களுக்குக் கிடைக்காமல் போனது.
அதனால் நாங்கள் கற்பதில் சில பின்னடைவுகள் இருந்திருக்கின்றன. தற்போது உங்களுக்குத் தேவையான சில குறைகளை முன்னாள் மாணவர்களாகிய நாங்கள் நிவர்த்தி செய்துள்ளோம். மாணவர்களாகிய நீங்கள் நன்கு கற்று இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் கனவுகளை நிவேற்றிக்கொள்ள வேண்டும்'' எனப் பேசியது அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
இதையும் படிங்க:Naan Mudhalvan scheme: 'நான் முதல்வன்' - 'உயர்வுக்குப் படி' திட்டத்தின் மூலம் 15,713 மாணவர்கள் பயன்