குச்சியால் யானையை விரட்டும் வன ஊழியர்.. வீடியோ வைரல்! - Gudalur elephant
Published : Oct 3, 2023, 7:57 AM IST
நீலகிரி:கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் நொடிப் பொழுதில் காட்டு யானையிடமிருந்து தப்பிக்கும் வன ஊழியரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், நேற்று (அக்.2) கூடலூர் சேரம்பாடி பகுதியில் காட்டு யானையின் முன், வன ஊழியர் ஒருவர் நின்று கொண்டு, கையில் குச்சி உடன் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி யானையை விரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில், வன ஊழியர்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் யானையை விரட்டும் பணியில் ஈடுபடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனவிலங்குகள் சுதந்திரமாக இருக்கவும், குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருக்கவும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் யானைகள் விரட்டும் வன ஊழியர்களுக்கு அதிகாரிகள் உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.