கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை - போராடி மீட்ட வனத்துறை - கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை மீட்பு
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் போடூர் அடுத்த கட்டமடுவு அருகே செல்வன் என்பவருக்குச் சொந்தமான தண்ணீர் நிறைந்த 30 அடி ஆழ விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நான்கு மாத குட்டி யானை ஒன்று தண்ணீர் தேடி வரும் பொழுது தவறி விழுந்துள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். பொதுமக்களின் தகவலை அடுத்து வனத்துறையினர் தீயணைப்பு துறையின் உதவியுடன் 30 அடி ஆழ கிணற்றில் இருந்த குட்டி யானையை பத்திரமாக மீட்டனர்.
பின்னர், டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி வனப்பகுதிக்கு விட அழைத்துச் சென்றனர். கோடை காலம் தொடங்கிய நிலையில் யானைகள் காட்டுப் பகுதியில் இருந்து தண்ணீர் தேடி விவசாய நிலங்களை நோக்கி வருவது தொடர் கதையாகி உள்ளது. வனத்துறை அதிகாரிகள் காடுகளில் யானைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பினால் யானைகள் காடுகளில் இருந்து தண்ணீரை தேடி வெளியேறுவது தடுக்கப்படும் என வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு