சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த 20 யானைகள்.. கிருஷ்ணகிரி வனத்துறை எச்சரிக்கை - wild elephant in village
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து இன்று காலை நாகமங்கலம் வழியாக, 20 காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. சானமாவு வனப்பகுதியில் இருந்த 20 யானைகளில் 4 யானைகள், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து, பேரண்டப்பள்ளி என்னும் இடத்திற்கு சென்று உள்ளது.
இதன் காரணமாக பேரண்டப்பள்ளி, கதிரேப்பள்ளி, ஆலூர், காமன்தொட்டி, காவேரி நகர் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.