தமிழ்நாடு

tamil nadu

நிலக்கோட்டையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 11:17 AM IST

ETV Bharat / videos

வரலட்சுமி விரதம், ஓணம் பண்டிகை எதிரொலி.. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!

திண்டுக்கல்: நிலக்கோட்டை பூ மார்க்கெட் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பூ மார்க்கெட் ஆக விளங்குகிறது. மேலும் நிலக்கோட்டை பகுதியை சுற்றி பூக்கள் சாகுபடி பிரதானமாக உள்ளதால், இந்த பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் பூக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. 

பூக்களின் விலை அதிரிக்க காரணம்:பெண்கள் கணவன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து கொண்டாடும் ஸ்ரீ வரலட்சுமி விரதம் நடைபெற உள்ளது. அதேபோல் கேரளாவில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இவற்றை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. 

ஏற்கனவே பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி உள்ளூர் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்ய நிலக்கோட்டை பூ சந்தையில் கூடியதால் விலை மேலும் அதிகரித்து உள்ளது. 

தற்போது மார்க்கெட்டில் பூக்களின் நிலவரம்: மல்லிகை பூ - ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய், முல்லை பூ - 450 ரூபாய் முதல் 500 ரூபாய், ஜாதிப்பூ - 300 ரூபாய் முதல் 350 ரூபாய், கன்காம்பரம் - ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய், செவ்வந்திப் பூ - 150 ரூபாய் முதல் 200 ரூபாய், சம்பங்கி பூ - 450 ரூபாய் முதல் 500 ரூபாய், பட்டன் ரோஸ் 250 ரூபாய் மற்றும் சாதா ரோஸ் 150 ரூபாய் என விற்பனையாகிறது. மேலும் வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details