தமிழ்நாடு

tamil nadu

தருமபுரி பூக்கள் விலை கிடு கிடு உயர்வு

ETV Bharat / videos

Flower price increase due to varalakshmi viratham: வரலக்ஷ்மி விரதம்: தருமபுரி பூக்கள் விலை கிடு கிடு உயர்வு! - தருமபுரி நகர பேருந்து நிலையம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 4:06 PM IST

தருமபுரிநகர பேருந்து நிலையத்தில் பூக்கள் சந்தை செயல்பட்டு வருகிறது. பென்னாகரம், பாலக்கோடு, தொப்பூர் உள்ளிட்ட பகுதிகள் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் விவசாய விளைநிலங்களில் விளைவித்த பூக்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

நாளை (ஆக.25) வரலக்ஷ்மி விரதம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் பூஜைக்காக பூக்களை வாங்கிச் செல்கின்றனர். பூக்களின் தேவை அதிகரிப்பால் பூக்களின் விலை கடந்த இரு தினங்களை விட உயர்ந்து விற்பனையானது. சம்பங்கி பூ கிலோ 200 ரூபாய், சாமந்தி கிலோ 140 ரூபாய், பன்னீர் ரோஸ் 140 ரூபாய், அலரி பூ ஒரு கிலோ 200 ரூபாய், கனகாம்பரம் கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், மல்லி கிலோ 30 ரூபாய், நந்த வட்டம் பூ 250 ரூபாய், குண்டுமல்லி கிலோ 400 ரூபாய், சன்னமல்லி கிலோ 400 ரூபாய், தாழம்பூ ஒரு பூ 100 முதல் 150 ரூபாய், தாமரை பூ ஒன்று 40 ரூபாய், 10 ரோஸ் கொண்ட கட்டு 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு தினங்களை விட இன்று பூக்கள் விலை ஒரு மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. நாளை மேலும் விலை உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது. பூ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details