ஊட்டி மலர் கண்காட்சி: திடீரென சரிந்து விழுந்த மலர் அலங்காரம்!
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுவரும் கோடை விழாவை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுத்து வருகின்றனர். சுமார் ஒரு லட்சம் கார்னேஷன் பூக்களைக் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மாதிரியை 75 நீளம், 20 உயரத்தில் வடிவமைத்திருந்தனர். இந்த நிலையில், நேற்று (மே. 22) பிற்பகலில் இந்த அலங்காரத்தின் ஒருபகுதி திடீரென சரிந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக பூங்கா நிர்வாகம் இதனை சரி செய்தது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST