கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க 37வது நாளாக தொடரும் தடை! - தேவதானப்பட்டி வனத்துறை
Published : Dec 9, 2023, 11:09 AM IST
தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்று முதல் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடை விதித்தனர்.
இந்நிலையில், கடந்த 15 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, வட்டக்காணல் மற்றும் வெள்ளகெவி பகுதிகளில் மழைப் பொழிவு முற்றிலும் இல்லாமல் இருந்த நிலையில், அருவிக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்து வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மீண்டும் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அருவியில் மீண்டும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணத்தால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க விதிக்கப்பட்ட தடை 37வது நாளாக தொடர்வதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: போடிநாயக்கனூர் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... அடித்து செல்லப்பட்ட தென்னை மரங்கள்!