குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை - தென்காசி மாவட்ட செய்திகள்
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையம், ஆலங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST