தமிழ்நாடு

tamil nadu

தென்மாவட்டங்களுக்கு மழை நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

ETV Bharat / videos

ஈரோடு மாவட்டத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு! - sulur

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 10:49 PM IST

ஈரோடு: தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது‌. இதனால் நீர் நிலைகள் நிரம்பி சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களுக்கு உதவும் வகையில் ஈரோடு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பிஸ்கட், போர்வைகள்,எண்ணெய், தண்ணீர் கேன்கள், வெண்ணை,அரிசி என 6.45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தங்க விக்னேஷ்,பேரிடர் மேலாண்மை தாசில்தார் அங்கமுத்து மற்றும் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் அனுப்பி வைத்தனர். தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details