தமிழ்நாடு

tamil nadu

வெள்ளை நிற நாகப்பாம்பு

ETV Bharat / videos

Coimbatore White Cobra: கோவையில் பிடிபட்ட 5 அடி வெள்ளை நாகப்பாம்பு வீடியோ! - போத்தனூரில் பிடிபட்ட வெள்ளை பாம்பு

By

Published : May 4, 2023, 2:19 PM IST

கோயம்புத்தூர்: போத்தனூர் சக்திநகர் பகுதியில் ஆனந்த் என்பவரது வீட்டில் வெள்ளை நிற பாம்பு ஒன்று இருப்பதாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அந்த அமைப்பை சார்ந்த மோகன் என்பவர் ஆனந்த் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது சுமார் 5 அடி நீளமுள்ள வெள்ளை நாகம் (White Cobra) இருந்தது தெரியவந்தது. அதன்பிறகு அந்த வெள்ளை நிற நாகம் காயமின்றி பிடிக்கப்பட்டு கோவை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த வெள்ளை நிற நாகத்தை மங்கரை அடர்வனப்பகுதியில் விடுவித்தனர். 

கடந்த 2ம் தேதி இரவு இந்த வெள்ளை நிற நாகம் பிடிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை அடர் வனப்பகுதியில் விடுவிக்கபட்டது. அல்பினோ கோப்ரா என்ற வகையை சேர்ந்த இந்த நாகப்பாம்பு மரபணு பிரச்னை காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும், இது போன்ற மரபணு மற்றும் நிறமிகளில் இருக்கும் பிரச்னைகளால் இருக்கும் பாம்புகள் வெள்ளை நிறத்தில் இருக்கும் எனவும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டும் கோவை மதுக்கரை பகுதியல் இதே போன்ற வெள்ளை நிற பாம்பு மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details