வீடியோ: பிகாரில் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி வெடித்து சிதறியது - பிகார் லாரி விபத்து
பிகார் மாநிலம் பாகல்பூரில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி நேற்றிரவு (டிசம்பர் 13) பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த லாரியின் ஓட்டுநர் மந்து யாதவ் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வெடிப்பின்போது சிலிண்டர் துண்டுகள் 100 மீட்டர் சுற்றளவுக்கு சிதறின. வெடிச்சத்தம் பல கிலோ மீட்டர் தூரம் கேட்டுள்ளது. இந்த வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST