ஆம்பூர் தனியார் தோல் தொழிற்சாலை குடோனில் பயங்கர தீ விபத்து! - fire accident
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியில் ஏசுராஜ் என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி தோல் தொழிற்சாலை குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தில் குடோனில் இருந்த நான்கு சக்கர வாகனம் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து தொடர்பாக உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.