தேனி பகவதி அம்மன் கோயில் கொடிமரத்தில் பால் வடிந்த அதிசயம்! - சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்
தேனி: அல்லிநகரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. மேலும் 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நிகழ்வான கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று கோலாகலமாகத் துவங்கியது.
கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது கொடி மரத்திலிருந்து திடீரென பால் வடிந்தது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கோயிலுக்கு வருகை புரிந்து, அதை ஆச்சரியத்துடன் பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர்.
பின்னர் கொடி மரத்துக்குக் கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலய மூலவரான பகவதி அம்மனுக்கு வண்ண பட்டு உடுத்திச் சிறப்புத் தீபாராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடி மரத்தில் பால் வடிந்ததால் அதனைக் காண ஏராளமான பொதுமக்கள் கோயில் வளாகத்திற்குக் குவிந்து அந்த அதிசய நிகழ்வைப் பக்தி பரவசத்துடன் பார்த்து வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: ரமணரின் 73-வது ஆராதனை விழா: மனமுருக பாடிய இளையராஜா!