ஈரோட்டில் லாரி மோதி பெண் டிக்கெட் பரிசோதகர் பலி...பதறவைக்கும் சிசிடிவி காட்சி - ஈரோட்டில் லாரி மோதி பெண் டிக்கெட் பரிசோதகர் பலி
தஞ்சாவூரை சேர்ந்த அனிதா என்பவர், ரயில்வேயில் டிக்கட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஈரோடு திண்டலில் உறவினரின் இறப்பு துக்க நிகழ்வுக்காக இரு தினங்களுக்கு முன் குடும்பத்துடன் வந்துள்ளனர். அருகில் உள்ள கடைக்கு செல்ல அனிதா தனது உறவினர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதில் பின் பக்கம் அமர்ந்து வந்த அனிதா நிலை தடுமாறி பின்னால் வந்த லாரியில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST