கொடைக்கானலில் தொடங்கியது பேஷன் ஃபுருட் சீசன்! - kodaikanal
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பேஷன் ஃபுருட் விளைச்சல் தொடங்கியுள்ளது. ஜூலை முதல் ஜனவரி மாதம் வரை விளைச்சல் கொடுக்கும் இப்பழம் மருத்துவ குணம் கொண்டதாக திகழ்கிறது. இந்த பழங்களுக்கு சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் நல்ல வரவேற்பு உள்ளதாக கூறுகின்றனர். தற்போது கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் வரை விற்பனையாவதாகவும் கூறுகின்றனர். தொடர்ந்து விவசாயிகளை ஊக்குவிக்க இந்த பழ நாற்றுகளை தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST