தமிழ்நாடு

tamil nadu

பாலாற்றில் தோல் கழிவுகளை கலக்கும் தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ETV Bharat / videos

இரவு நேரங்களில் பாலாற்றில் கலக்கும் தோல் கழிவுகள்; விவசாயிகள் குற்றச்சாட்டு - தோல் கழிவுகள்

By

Published : Mar 20, 2023, 11:21 AM IST

திருப்பத்தூர்:வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கனமழையை பயன்படுத்தி வாணியம்பாடியை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இரவு நேரங்களில் தோல் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமல் பாலாற்றில் திறந்து விடுகின்றனர்.

இதனால் மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு பாலத்தின் கீழ் அதிக அளவு நுரை பொங்கி பாலாறு துர்நாற்றம் வீசி காணப்படுகிறது. மேலும் கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பாலாற்றில் சட்டவிரோதமாக மறுசுழற்சி செய்யாமல் தோல் கழிவுகளை கலக்கும் தோல் தொழிற்சாலைகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்பட்டு, தொழிற்சாலைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதனையும் மீறி வாணியம்பாடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தோல் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமல் கால்வாயில் திறந்து விட்ட தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் மீண்டும் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலை நிர்வாகம் கனமழையை பயன்படுத்தி மீண்டும் தோல் கழிவுகளை பாலாற்றில் திறந்து விட்டுள்ளனர்.

இதனால் பாலாற்று படுகையில் உள்ள விளைநிலங்களில் உப்புதன்மை காணப்பட்டும், நிலத்திடி நீர் முற்றிலும் மாசடைந்தும், பாலாற்றில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பாலாற்றில் தோல் கழிவுகளை கலக்கும் தோல் தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details