தமிழ்நாடு

tamil nadu

கீழ்பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டம்

ETV Bharat / videos

அமைச்சர் கொடுத்த வாக்குறுதி எங்கே?.. தண்ணீரை திறந்துவிட கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - தண்ணீரை திறந்துவிட கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 30, 2023, 7:10 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கீழ்பவானி கால்வாயில் 720 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் திட்டம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பிறகு பணிகள் தொடங்கப்பட்ட இடத்தில் மட்டும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்டது. 

ஆனால் பணிகள் தொடங்கப்பட்ட 11 இடங்களுக்கும் மேலாக பொதுப்பணித்துறை மற்றும் கட்டுமான நிறுவனம் கால்வாயின் கரைகளை சேதப்படுத்தி பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பணிகளை விரைந்து முடித்து அமைச்சர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் கூறியபடி ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட வேண்டும். மேலும், கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276 ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீழ்பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் புங்கம்பாடி ஊஞ்சலூர் பிரிவு வாய்க்காலில் இறங்கி 200க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை 276 ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு அளித்த வாக்குறுதியின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறப்புக்கான ஆணையை வெளியிட வேண்டுமென முழக்கம் எழுப்பி கீழ்பவானி பாசன விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:"வாக்கு அரசியலுக்காக மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அலட்சியம்" - சீமான் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details