jailer fdfs: ஓசூரில் "ஜெயிலர்" திரைப்படத்தின் முதல் காட்சியை மலர் தூவி கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்! - சன்பிக்சர்ஸ்
ஓசூர்: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து, சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படமானது இன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை ரசிகர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக ஒசூர் மாநகரில், 2 திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும், முதல் காட்சியானது 9.30 மணிக்கு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், காலை 5 மணி முதல் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வரத் தொடங்கினர்.
மேலும், நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள், ரஜினி படத்திற்கு மாலை அணிவித்தபோது விசில்கள் பறந்தன. பின்னர், திரையரங்க வளாகத்தினுள், பட்டாசுகள் வெடித்து, இனிப்புக்களை வழங்கி கொண்டாடிய ரசிகர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர், போலீசார் ரசிகர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவித்தும், கூட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதில் 5 வயது சிறுவனும், வரிசையில் காத்திருந்து சினிமா பார்க்க சென்ற நிகழ்வை, ரசிகர்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர். இந்த திரைப்படத்தில், ரஜினியின் முதல் காட்சியினை ரசிகர்கள் தேங்காய் உடைத்து, மலர் தூவி கொண்டாடி தீர்த்தனர்.