கும்பக்கரை அருவியில் பொங்கும் வெள்ளம்: சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை நீட்டிப்பு! - தேனி மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது, கும்பக்கரை அருவி. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவி வெள்ளம்போல் காட்சியளிக்கிறது. மேலும் இதுபோன்ற சூழலில் பொதுமக்கள் அருவிக்குச்சென்று குளிக்க பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதால், பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்து பொதுமக்கள் குளிக்க ஏதுவான சூழல் அமையும் போது பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்; மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை தொடரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST