தமிழ்நாடு

tamil nadu

முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் பதுக்கிய வெடிபொருட்கள் மீட்பு

ETV Bharat / videos

முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் பதுக்கிய வெடிபொருட்கள் மீட்பு! - இலங்கை

By

Published : Jul 11, 2023, 1:37 PM IST

இலங்கை:தமிழர்களின் மீதான சிங்களர்களின் அடக்குமுறையை எதிர்த்து உருவானது தான், விடுதலைப் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகள் இயக்கம் பல நவீன ஆயுதங்களை வைத்து இருந்தது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திற்குப் பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவ்வப்போது இலங்கையில் மண்ணுக்குள் புதையுண்டிருந்த ஆயுதங்கள் வெளிவந்த படி இருந்தன. இந்நிலையில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின், முல்லைத்தீவு போலீஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில், வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடிப் படையினர் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களைக் கைப்பற்றினர்.

இந்த வெடி பொருட்களை விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் பெரிய பரா-13, சின்ன பரா - 01, 82MM மோட்டார் - 49, 60MM மோட்டார் - 01, ஆர்விஜி - 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஆகிய வெடி பொருட்களை சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்களை பாதுகாப்பாக அழிக்க உள்ளனரா அல்லது என்ன செய்ய உள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

ABOUT THE AUTHOR

...view details