CCTV - விலை உயர்ந்த பைக் திருட்டு: காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா! - பழனியில் பைக் திருட்டு
பழனி:திண்டுக்கல் மாவட்டம், பழனி 9வது வார்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், மதன்குமார். இவர் தனது வீட்டின் முன் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்த போது, இருசக்கர வாகனம் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மதன்குமார் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாரியம்மன் கோயில் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மதன்குமாரின் இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் அதன் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் நகர் முழுவதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
9 வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் அண்மையில் தான் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.