எருது விடும் விழா: காளையிடம் நூலிழையில் உயிர் தப்பிய பெண்!! - நூலிழையில் உயிர் தப்பிய பெண்
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் மாபெரும் எருது விடும் விழா நடைப்பெற்றது. இவ்விழாவினை வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா கொடியசைத்து துவக்கி வைத்தார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் குப்பம் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன.
இப்போட்டியில் கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்கு பின்னரே காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. குறிப்பிட்ட தூரத்தை குறைத்த நேரத்தில் எட்டிய காளைக்கு முதல் பரிசாக 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 70 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாய் என 68 பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்த விழாவினை காண பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இந்நிலையில் போட்டியில் பங்கேற்ற காளைகள் சீறிப் பாய்ந்து ஓடுபாதையில் ஓடின. அப்போது காளையிடம் இருந்து நூலிழையில் பெண் உயிர் தப்பிய நிகழ்வு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் எருது விடும் விழாவில் காளைகள் மோதி 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கேஜிஎஃப்-ல் கொடூர கொலை.. தமிழகத்தில் செப்டிக் டேங்க் கிளினிங் வேலை.. இளைஞர் சிக்கியது எப்படி?