தமிழ்நாடு

tamil nadu

ஐஏஎஸ் அதிகாரியின் கேமராவில் சிக்கிய கொம்பன் யானை!

ETV Bharat / videos

ஐஏஎஸ் அதிகாரியின் கேமராவில் சிக்கிய கொம்பன் யானை! வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட கூடுதல் கலெக்டர் மனீஷ் - கொம்பன் யானை

By

Published : Jul 29, 2023, 4:56 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம்ஊரக வளர்ச்சித் துறையில் கூடுதல் கலெக்டராக மனீஷ் ஐஏஎஸ் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று (ஜூலை 28) தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஆய்வு பணி முடிந்து மீண்டும் ஈரோடு செல்வதற்காக தாளவாடியில் இருந்து காரில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் என்ற இடத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய தந்தத்துடன் கூடிய கொம்பன் யானை சாலையில் சாவகாசமாக சுற்றி திரிந்தது. 

காட்டு யானையை கண்ட கூடுதல் கலெக்டர் மனீஷ் காரை நிறுத்தி தனது கேமராவில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை கூடுதல் கலெக்டர் மனீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  ‘இயற்கை நேசிப்போம் யானைகளை பாதுகாப்போம்’ என அதில் வாசகங்களை ஆங்கிலத்தில் பதிவிட்டார். மேலும் இந்த பதிவை தமிழ்நாடு வனத்துறை தலைமை செயலாளர் சுப்ரியா சாகு பார்க்கும் வகையில் டேக் செய்துள்ளார். தற்போது இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details