தமிழ்நாடு

tamil nadu

குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

ETV Bharat / videos

தேசிய குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி, வெண்கலம் வென்ற ஈரோடு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு! - தேதிய அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 9:36 PM IST

ஈரோடு:தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி ஜார்கண்ட் ராஞ்சியில் கடந்த 23 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 7 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில், குத்துச்சண்டை போட்டி மற்றும் இசைக்கேற்ப சிலம்பம் சுற்றுதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் வெற்றி பெற்று இரண்டு வெள்ளிப் பதக்கங்களும், நான்கு வெண்கலப் பதக்கங்களும் வென்றனர். தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் ஈரோடு மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட 7 பேரில் 6 பேர் பதக்கங்களைப் பெற்று ஊர் திரும்பினர்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று (ஆக.30) கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் பெற்றோர்கள், டிரம்ஸ் முழக்கத்துடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். 

மேலும், தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கும், மாவட்டத்திற்கும் பெருமை தேடித் தந்து தொடர்ந்து ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பெருமை தேடித் தருவதாகப் பயிற்சியாளர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details