தமிழ்நாடு

tamil nadu

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புளியம்பட்டி சந்தையில் 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை : வியாபாரிகள் மகிழ்சி

ETV Bharat / videos

பக்ரீத் பண்டிகை - புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி - bakrid

By

Published : Jun 22, 2023, 4:05 PM IST

ஈரோடுமாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும். இது  ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் இருப்பதால், இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ கொண்ட ஆட்டுக்கிடாய் 12ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 

பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர். சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கடந்த வாரத்தை விட இந்தவாரம் ஆடு, மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் விலையும் 3,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து கால்நடைகளும் விற்பனையானது என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதன்மூலம், புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதையும் படிங்க:நாட்டுவெடியைக் கடித்ததால் வாயில் காயமடைந்த பாகுபலி யானை - நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details