திருவண்ணாமலை பள்ளியில் களைக்கட்டிய சமத்துவ பொங்கல்; ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டம்! - pongal videos
Published : Jan 11, 2024, 8:03 PM IST
திருவண்ணாமலை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம் களைக்கட்டத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று திருவண்ணாமலையில் உள்ள தனியார்ப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவிற்காக மாணவ மாணவிகள் பாரம்பரிய உடைகளான பட்டு உடுத்தி இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். குறிப்பாக, சிறுமிகள் புத்தாடை அணிந்து பாடல் பாடியும், பல்வேறு வகையான பாடல்களுக்கு நடனமாடியும், மாணவர்கள் டிரம்ஸ் வாசித்தும், ஆசிரியர்கள் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான உறியடித்தும் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து பொங்கல் வைத்துப் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு சமத்துவ பொங்கல் விழாவைக் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து விபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் பேருந்து இயக்கிய ஓட்டுநர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்.