ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் ஈபிஎஸ்! - EPS going to participate Ramnath Govindhs farewell party
குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் ராம்நாத் கோவிந்துக்கு, பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் டெல்லியில் இன்று பிற்பகல் பிரிவு உபசார விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பாஜக தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று(ஜூலை 22) காலை எடப்பாடி பழனிசாமி ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST
TAGGED:
Delhi farewell party