தமிழ்நாடு

tamil nadu

Etv Bharat

ETV Bharat / videos

குன்னூர் ராணுவப் பயிற்சி தளத்தில் புகுந்த காட்டெருமைகள்... மக்கள் அச்சம் - people request

By

Published : Mar 28, 2023, 3:07 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள பிளாக் பிரிட்ஜ், பேரக்ஸ், வெலிங்டன், சின்னவண்டி சாேலை, உள்ளிட்டப் பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டி வெளியேற முடியாத சோகம் அரங்கேறியுள்ளது. 

இப்பகுதி முழுவதும் காடுகள் நிறைந்துள்ளதனால் கூட்டம் கூட்டமாக காட்டெருமைகள் காட்டுக்குள்ளிருந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகளவில் காணப்படுவதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பகுதியில் இந்திய ராணுவப் பயிற்சி தளங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ராணுவப் பயிற்சி தளங்களுக்குள் மிகுந்த ஆக்ராேஷத்துடன் நுழைந்த 3 காட்டெருமைகள் சத்தமிட்டவாறு அங்கிருந்த பொருள் மற்றும் இடத்தையும் சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. எனினும் அங்கிருந்த விளம்பரப் பலகைகளை முட்டியும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பயிற்சி தளங்களுக்குள் சுற்றித் திரிந்தது அங்கிருந்தோரை அச்சுறுத்தியது. வெகு நேரத்திற்குப் பிறகு, அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்ரெுமைகள் அருகில் இருந்த காட்டுக்குள் சென்றன.
   இப்பகுதி ராணுவப் பயிற்சி தளம் என்பதனால் அடிக்கடி முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் வந்து செல்லும் இடமாகும். அதனால் இப்பகுதியில் விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளதாகவும், அசம்பாவிதம் நடக்கும் முன்பே இந்த காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:Cheetah Sasha Dies: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலி உயிரிழப்பு - என்ன காரணம் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details