குத்தாட்டம் போட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.. வைரல் வீடியோ! - viral video
Published : Nov 17, 2023, 1:49 PM IST
திருப்பத்தூர்: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மாணவர்களுடன் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆசிரியரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேருவின் பிறந்தநாள் மற்றும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ,மாணவர்களுக்கா கலை நிகழ்ச்சிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் சினிமா பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்தினர்.
இந்நிலையில், சினிமா பாடலுக்கு உணர்ச்சி வசப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆங்கில ஆசிரியர் சதீஷ் ஆகியோர் விழா மேடைக்கு திடீரென வந்து, சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு அசத்தினார். இதனைக் கண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கைத்தட்டி ஆசிரியரை ஊக்கப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.