மருதமலை படிக்கட்டில் முகாமிட்ட காட்டு யானைக் கூட்டம் - விரட்டியடித்த வனத்துறை - காட்டு யானைகள்
கோயம்புத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை என்னும் பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அருகேவுள்ள கேரள வனப்பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறியுள்ளன.
அந்த யானைகள் பெரிய தடாகம், மருதமலை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.இதில் 8 யானைகள் கொண்ட கூட்டம் மருதமலை பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மருதமலை கோயிலுக்குச் செல்லக்கூடிய படிக்கட்டிற்கு வந்தது.
இதனையடுத்து இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூட்டமாக வந்த யானைகளை அருகில் உள்ள சோமையம்பாளையம் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதையும் படிங்க:கிருஷ்ணகிரியில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி!