தமிழ்நாடு

tamil nadu

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/06-July-2023/18926154_dnd.mp4

ETV Bharat / videos

கொடைக்கானலில் யானை உருவச் சிலை - சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி - tn news

By

Published : Jul 6, 2023, 10:13 AM IST

திண்டுக்கல் மாவட்டம்கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாவை அனுபவிக்க பலரும் தற்போது வருகை புரிந்து வருகின்றனர் . 

இந்த நிலையில், கொடைக்கானல் பிரதான சுற்றுலா பகுதிகளாக இருக்கும் வனத்துறை கட்டுப்பாட்டில் தூண் பாறை, மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளது. இந்த தூண்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் யானைகளின் உருவங்கள் தத்ரூபமாக தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த யானை உருவங்கள் வனப்பகுதியில் இருந்து யானை வருவது போல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளின் உருவத்தின் முன்பு நின்று கொடைக்கானலுக்கு சுற்றுலாவை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

மேலும், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் வனத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொடைக்கானல் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தூண்பாறை நுழைவு வாயில் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக இயற்கை சார்ந்த ஓவியங்கள் சுவரில் வரைய இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details