இரு யானைகளுக்கு இடையே மோதல்- வைரல் வீடியோ! - மேற்கு வங்காளத்தில் இரு யானைகளுக்கிடையே மோதல்
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பய்குரியின் வனப்பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்கு அருகே ் இரண்டு யானைகள் சண்டையிடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ராணுவத்தினர் கூறுகையில், வனப்பகுதியிலிருந்து இரு யானைகள் தண்ணீர், உணவு தேடி வந்திருக்க கூடும். இரு யானைகளும் திடீரென சண்டை போட்டுக் கொண்டதை அங்கு இருப்பவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST