தமிழ்நாடு

tamil nadu

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ! பொதுமக்கள் அச்சம்.

ETV Bharat / videos

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ! பொதுமக்கள் அச்சம். - forest department

By

Published : Jun 26, 2023, 3:58 PM IST

Updated : Jun 26, 2023, 4:34 PM IST

ஈரோடு:தாளவாடி தாலுக்கா எல்லைக்குட்பட்ட சாந்தரதொட்டி கிராமத்தில் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10 வனச்சரகங்களில் யானைகள், சிறுத்தை புலிகள், கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தண்ணீர் மற்றும் உணவு தேடி, காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில்  தாளவாடி தாலுக்கா எல்லைக்குட்பட்ட கிராமத்தில்  திடீரென புகுந்த காட்டு யானை விவசாய நிலத்திற்குள் புகுந்து கரும்பு, வாழை பயிர்களை உள்ளிட்ட பலவற்றையும் நாசம் செய்தது.இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொது மக்கள் வெளியே செல்ல முடியாமல் இருப்பதாக  சுற்றுவட்டார கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க :உடல் மெலிந்த நிலையில் இருந்தாலும் அரிசி கொம்பன் யானை ஆரோக்கியத்துடன் உள்ளது - வனத்துறையினர்

Last Updated : Jun 26, 2023, 4:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details