தமிழ்நாடு

tamil nadu

மரத்தில் ரிலாக்ஸாக காலை வைத்து பலாப்பழம் சாப்பிடும் யானை

ETV Bharat / videos

Viral video: மரத்தில் ரிலாக்ஸாக காலை வைத்து பலாப்பழம் சாப்பிடும் யானை! - வனத்துறை

By

Published : Jul 19, 2023, 1:50 PM IST

ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோள காட்டில் பலா மரங்களும் உள்ளன. தற்போது பலா மரங்களில் பலா காய்த்து தொங்குவதால், அதை சாப்பிட ஒற்றை யானை அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இதனிடையே, கடந்த 4 நாட்களாக நடூர் பகுதியில் முகாமிட்ட ஒற்றை யானை அங்குள்ள மக்காச்சோளப் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து பலா மரத்தில் உள்ள பலா பழத்தை பிடுங்கி சாப்பிட்டது. மேலும், யானை தனது கால்களை தூக்கி மரத்தின் மீது வைத்து மரக்கிளைகளை முறித்தும் சாப்பிடுகிறது. இதனை பார்க்க ஏராளமான கிராம மக்கள் அங்கு குவிந்தனர். 

யானையைப் பார்க்க வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் அவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். பின்னர் வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர். ஆனால், யானை மீண்டும் விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து பதுங்கியது. கடந்த 4 நாட்களாக விவசாய தோட்டத்தில் புகுந்து அச்சுறுத்தும் இந்த காட்டு யானையை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details