என் வழி தனி வழி - சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய படையப்பா யானை! - Munnar Road
Published : Aug 25, 2023, 2:51 PM IST
திருப்பூர்: சுற்றுலா தலமான மூணாறுக்கு நாள்தோறும் அதிகமான சுற்றுலாப் பயணியர் வருகை தருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா செல்லும் வாகனங்கள் அதிக அளவில் உடுமலைப்பேட்டை மூணாறு சாலையில் சென்று வருகின்றது. இந்த நிலையில் உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் படையப்பா என்ற ஒற்றை யானை நின்று சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்தை வழி மறித்து தாக்க முற்பட்டது.
சுமார் 1 மணிநேரம் சாலையில் நின்று பயணிகளை அச்சுறுத்திய படையப்பா யானை 1 மணி நேரத்திற்குப் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. வனவிலங்குகள் சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் வாகன ஒட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதற்கு முன்னர் வன விலங்குகளால் பல விபத்துகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் உயிர்ச்சேதம் ஏற்படாதவாறு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கேட்டுகொண்டனர். பரபரப்பான சாலையில் ஒற்றை காட்டு யானை நின்று வாகனங்களை தாக்க முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.